இபிஎஸ்-க்கு அடுத்த ஆப்பு… செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான்… செம குஷியில் துள்ளும் விஜய்…!

By Nanthini on மார்கழி 11, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுகவிலிருந்து ஈபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி தூக்கும் நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியிலிருந்து நீக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்தது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலரும் விஜய் கட்சியில் இணைய உள்ளதாக செங்கோட்டையன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் கடந்த சில நாட்களாகவே மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள். அதன்படி தற்போது அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகளை தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைக்க செங்கோட்டையன் திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அதிமுக மாஜி அமைச்சர்கள், சில மூத்த எம்எல்ஏக்கள், எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் நபர்களிடம் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. சமீபகாலமாகவே அதிமுகவிலிருந்து வெளியேறும் தலைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.