விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காலியாக உள்ள ஆய்வக நுட்புநர் நிலை 2 (Lab Technician Grade II) பணியிடங்களை தற்காலிகமாக, தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் 15,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயது முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர் பட்டயப் படிப்பு (DMLT) முடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
