மதுரை இளந்தைக்குளம் பகுதியில் உள்ள எல்காட் (ELCOT) ஐடி பூங்காவில் இயங்கி வரும் பிரபல எச்சிஎல் (HCL) நிறுவனம், புதிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘Process Associate’ மற்றும் ‘Customer Service Representative’ ஆகிய பணியிடங்களுக்கு 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் கலை மற்றும் வணிகவியல் (BBA, B. Com, MBA, MA, M. Com) படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அனுபவம் இல்லாத பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் மதுரை இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறனும், இரவு நேரப் பணிகளில் ஈடுபடும் ஆர்வமும் இருப்பது அவசியமாகும். பி.இ மற்றும் பி.டெக் போன்ற தொழில்நுட்பப் பட்டதாரிகளாக இருந்தால், ஒரு வருடப் பணி அனுபவம் உடையவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்களுக்குத் துறை சார்ந்த சிறந்த ஊதியம் வழங்கப்படும் என நிறுவனம் உறுதி அளித்துள்ளது. சொந்த ஊரிலேயே தங்கி முன்னணி ஐடி நிறுவனத்தில் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகள், எச்சிஎல் இணையதளம் வழியாகத் தங்களின் விவரங்களைச் சமர்ப்பித்து இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7…
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின்…
கடந்த 16 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வந்த…
கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக…
கம்மம் நகரில் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த ஜஸ்வந்த் தேஜா என்ற மாணவர், தனது…