Categories: சினிமா

பிரபல நடிகையிடம் 40 வருடம் பேசாமல் இருந்த ஜெயலலிதா… ஒரு கடிதத்தால் சமாதானம் ஆன சம்பவம்…

Spread the love

மைசூரில் பிறந்தவர் ஜெயலலிதா. இவரின் இயற்பெயர் கோமளவல்லி என்பதாகும். இவரது மூதாதையர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள். அவரது தந்தை ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே காலமானார். அதன் பின்னர் ஜெயலலிதாவின் தாயார் வேதவல்லி சந்தியா என தன் பெயரை மாற்றிக்கொண்டு தமிழ் சினிமாவில் நடித்தார். ஜெயலலிதா பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்தது. அதனால் படிப்பை கைவிட்டு சினிமாவில் நடிக்க தொடங்கினார் ஜெயலலிதா.

ஜெயலலிதா எம்.ஜி. ஆர் உடன் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டானது. தென்னிந்தியாவின் பிரபலமான புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தார் ஜெயலலிதா. பின்னர் எம்ஜிஆர் முதலமைச்சர் ஆன பின்பு எம்ஜிஆர் கட்சியில் இணைந்து பணியாற்றி முதலமைச்சரானவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆறு முறை பதவி வகித்தவர். அவரை ‘புரட்சி தலைவி’ என்றும் ‘அம்மா’ என்றும் அழைப்பர். நாட்டு மக்களுக்காக இவர் ஆரம்பித்த தொட்டில் குழந்தை திட்டத்துக்காக ஐக்கிய நாடுகள் சபையில் கைதட்டை பெற்ற இந்தியாவில் சார்ந்த முதல் பெண் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தான். அரசியலுக்கு நுழைவதற்கு முன்பு கிட்டத்தட்ட 170 படங்களுக்கும் மேல் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜெயலலிதா. பின்னர் தமிழ்நாட்டு மக்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டு திருமணம் எதுவும் செய்து கொள்ளாமல் அரசியலிலே இருந்தவர் ஜெயலலிதா.

சௌகார் ஜானகி தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஆவார். இவரின் முழு பெயர் சங்கரமஞ்சி ஜானகி என்பதாகும். கிட்டத்தட்ட 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சௌகார் ஜானகி. 300-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். தனது நடிப்பிற்காக நந்தி விருதுகள், கலைமாமணி விருது, செவிலியன் விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை பெற்றுள்ளார். இவரது தங்கை ஆன கிருஷ்ணகுமாரியும் பிரபல நடிகை ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்த காலகட்டம் அது. அப்போது ஜெயலலிதாவின் ஜெயா டிவியில் ஒரு நேர்காணலில் சௌகார் ஜானகி கலந்து கொண்டுள்ளார். அதில் ஜெயலலிதா உடனான சினிமாவில் உங்களுடைய நட்பு எப்படிப்பட்டது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சற்று எமோஷனலாக பதில் அளித்த சௌகார் ஜானகி, நானும் ஜெயலலிதாவும் சிறுவயதில் நண்பர்களாக தான் இருந்தோம். ஒரு சில கருத்து வேறுபாட்டால் அவர் என்னிடம் பேசவில்லை.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஜெயலலிதா என்னிடம் பேசவில்லை என்று கூறியுள்ளார் சௌகார் ஜானகி. மேலும் அவரிடம் நான் பேசுவதற்கு விருப்பமாக உள்ளேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழக முதலமைச்சராக ஜெயலலிதாவை பார்ப்பதற்கு நான் விரும்புகிறேன். அவர் வந்தால் நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்வார் என்று ஜெயா டிவி நேர்காணலில் கூறியிருந்தார் சௌகார் ஜானகி.

இந்த நேர்காணலை டிவியில் பார்த்த ஜெயலலிதா அவர்கள், மனம் உருகி உடனே தன் கைப்பட ஒரு கடிதத்தை எழுதி சௌகார் ஜானகிக்கு அனுப்பியிருந்தார். அதை பார்த்த சௌகார் ஜானகி உடனே கிளம்பி ஓடி வந்து ஜெயலலிதாவிடம் கலந்துரையாடி மகிழ்ந்துள்ளார். ஒரு சிறிய கடிதத்தின் மூலம் 40 வருட பிரிவு சேர்ந்து விட்டது. ஜெயலலிதாவும் சௌகார் ஜானகியும் அதற்கு பிறகு நண்பர்களாக இருந்தனர்.

admin

Recent Posts

“தலையில்லாமல் நிர்வாணமாக கிடந்த உடல்…” தனியாக அழைத்து சென்ற சக ஊழியர்… வாலிபர் கொலையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…

3 minutes ago

அட கடவுளே… 8 மாசமா சம்பளம் இல்ல… அப்புறம் பிச்சை எடுக்காம என்ன பண்றது?… கையில் பிச்சை பாத்திரத்துடன்… வீதியில் இறங்கிய அரசு பெண் அதிகாரி… இணையத்தில் வைரல்…!!

பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…

14 minutes ago

“வீட்டில் மகளுடன் இருந்த தொழிலாளி…” தனியாக அழைத்து சென்று முதலாளி செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…

17 minutes ago

ஐயோ கொடுமையே… காதல் திருமணம் சோகத்தில் முடிந்த விபரீதம்… மனைவியை அடித்துக் கொன்று தப்பிய கணவனின் கொடூரம்… உ . பி – யில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…

18 minutes ago

ஏங்க எழுந்திரிங்க… நாம வீட்டுக்குப் போயிடலாம்… விபத்தில் இறந்த கணவனின் உடலைப் பிடித்து கதறிய மனைவி… திருவாரூரில் நடந்த சோகம்…!

திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…

31 minutes ago