#image_title
இன்றைய காலகட்டம் பாஸ்ட் ஆனது ஆகும். எதையுமே ஃபாஸ்ட்டாக தான் செய்யும் உலகமாக மாறிவிட்டது. நம் முன்னோர்கள் பயிர்களை விளைய வைத்தது போல ஆர்கானிக் உரங்களை போட்டு விவசாயம் பெரும்பாலும் தற்போது நடக்கவில்லை. எல்லாமே ரசாயன உரங்கள் போட்டு தான் நாம் சாப்பிடும் அரிசி, பழங்கள், காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை.
அந்த ரசாயன உரம் போட்ட பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது மூலமாகவே நம் உடம்பில் ஏற்கனவே ரசாயனங்கள் கலப்பதாக ஆய்வறிக்கை உள்ளது. அதற்கு ஒரு படி மேல் போய் தற்போது ஒரு புதிய அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால் நாம் இந்தியாவில் வாங்கக்கூடிய உப்பு மற்றும் சர்க்கரையில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனமான டாக்ஸிக் லிங்க் நடத்திய ‘உப்பு மட்டும் சர்க்கரையில் மைக்ரோ பிளாஸ்டிக்’ என்ற ஆய்வில் உப்பு, கல் உப்பு, கடல் உப்பு உட்பட பத்து வகையான உப்பு வகைகள் மற்றும் உள்ளூர் சந்தைகளில் இருந்து வாங்கப்பட்ட ஐந்து வகையான சர்க்கரைகள் போன்றவற்றில் சோதனை செய்யப்பட்டது. இதில் அனைத்து உப்பு மட்டும் சர்க்கரை மாதிரிகளிலும் நார், துகள்கள், பிலிம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மைக்ரோ பிளாஸ்டிக் இன் அளவு 0.1 மில்லி மீட்டர் முதல் 5 மில்லி மீட்டர் வரை இருந்தது. குறிப்பாக மக்கள் அதிகமாக வாங்கும் அயோடைஸ்ட் உப்பில் மல்டி கலரில் மெல்லிய நார் மற்றும் பிலிம் வடிவத்தில் அதிக அளவிலான மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
டாக்ஸிக் லிங்க் ஆராய்ச்சியாளர் இதை பற்றி கூறுகையில், உப்பு மட்டும் சர்க்கரையில் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டுபிடித்தது அதிர்ச்சியாக இருந்தது. மேலும் இது மனித இனத்திற்கே கவலையான ஒரு விஷயம்தான். இது உலகளாவிய பிரச்சினையாக கூட மாறலாம் என்று கூறியுள்ளார். சராசரியாக ஒரு இந்தியர் ஒவ்வொரு நாளும் 10. 98 கிராம் உப்பு மற்றும் 10 ஸ்பூன் சர்க்கரையை உட்கொள்கிறார். இப்படி மைக்ரோ பிளாஸ்டிக் கலந்த உப்பு மட்டும் சர்க்கரையை மக்கள் சாப்பிட்டு வந்தால் அதனால் பல உடல் பிரச்சினைகளும் நோய்களும் உருவாகும் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே முந்தைய ஆய்வில் நுரையீரல், இதயம் போன்ற மனித உறுப்புகளிலும் தாய்ப்பால் மற்றும் பிறக்காத குழந்தைகளில் கூட மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டறியபட்டுள்ளது. தற்போது இது மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்த ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இது நமக்கு ஒரு அபாய மணி ஆகும். பிளாஸ்டிக் உபயோகத்தை குறைப்பது மட்டுமே இதற்கு ஒரே வழி. மனித இனத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் நாம் விழித்துக் கொள்ள வேண்டும். பூமிக்கு ஆபத்தான பிளாஸ்டிக் உபயோகங்களை தடுக்க வேண்டும்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…