#image_title
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட்டு திரைப்படங்களை கொடுத்து பிரபலமாக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். ரஜினி, கமல், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் மற்றும் சூர்யா என பல முன்னணி நடிகர்களை வைத்து கமர்ஷியல் படங்களைக் கொடுத்துள்ளார். கடைசியாக அவர் இயக்கிய லிங்கா உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்ததால் இப்போது நடிகராக மட்டும் பணியாற்றி வருகிறார்.
இயக்குனர் விக்ரமனிடம் அஸோசியேட் இயக்குனராக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். அதற்கு முன்பே அவர் 30க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். விக்ரமன் இயக்கிய புதுவசந்தம் திரைப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதில் பணியாற்றிய கே எஸ் ரவிக்குமாருக்கு ‘புரியாத புதிர்’ படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி.
அதில் தொடங்கிய கே எஸ் ரவிக்குமார் தொடர்ந்து கமர்ஷியல் ரீதியான படங்களாகக் கொடுத்து முன்னணி இயக்குனர் ஆனார். கமர்சியல் படங்களின் ராஜாவாக திகழ்ந்த இவர் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நாட்டாமை. இதில் குஷ்பு, மீனா, வினு சக்ரவர்த்தி, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் கவுண்டமணி செந்தில் கூட்டணியின் நகைச்சுவை மிகச்சிறப்பாக அமைந்திருக்கும். குறிப்பாக கவுண்டமணிக்குப் பெண் பார்க்க செல்லும் இடத்தில் நடக்கும் குளறுபடிகளும், அதில் எதையுமேக் கண்டுகொள்ளாமல் மிக்சர் தின்று கொண்டிருக்கும் ஒருவரின் உடல்மொழியும் இன்று வரை மீம் டெம்ப்ளேட்டுகளாக உள்ளன.
இந்த காமெடி உருவான விதம் குறித்து பேசியுள்ள கே எஸ் ரவிக்குமார், “அந்த ஆள் ஷூட்டிங் ஸ்பாட்டில் எலஜ்ட்ரீசியனாக வேலை பார்த்தார். எந்த வேலையும் செய்ய மாட்டார். எதாவது வேலை சொன்னால், நான் எலக்ட்ரீசியன், அது சம்மந்தமான வேலை மட்டும் கொடுங்கள் என்பார். கடுப்பாகிதான் அவருக்கு அந்த கதாபாத்திரத்தைக் கொடுத்தேன். அவர் எனக்கு நடிக்க தெரியாது எனப் பயந்தார். நான்தான் ‘அங்க உக்காந்துட்டு சுண்டல் சாப்புட்ரில்ல, அதை மட்டும் பண்ணு போதும் என்று கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தேன். அந்த காட்சி இப்படி கொண்டாடப்படும் காட்சியாக அமையும் என்று நினைக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில், உடல்நலம் குன்றிய கணவரை விட்டுவிட்டு, 50 வயது பெண் ஒருவர் தனது சொந்த…
பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…
துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…