கோவை மாவட்டத்தில் சூலூர் அருகே சுகந்தி நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன், மனைவி மேரி ஜூலியானா. பெட்டிக்கடை நடத்தி வருகின்றன. கடந்த 28ஆம் தேதி இவருடைய பெட்டி கடைக்கு இரண்டு மர்ம நபர்கள் பைக்கில் பிற்பகல் 3 மணி அளவில் வந்துள்ளனர். சிகரெட் வாங்குவது போல் நடித்து மேரி ஜூலியானவின் தலையை பிடித்து இழுத்து சுத்தியால் தாக்கிவிட்டு வலது காதில் மற்றும் கழுத்தில் இருந்த நான்கு சவரன் தங்க நகையை பறித்து ஓடி விட்டனர். வலியால் கதறிய மேரி ஜூலியானவை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். பின்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சி சி டிவி காட்சி உள்ளிட்டவை கைப்பற்றி அதில் இருந்த வீடியோவில் இருந்த வாகன எண்ணை சோதித்துப் பார்த்தபோது குணசேகர் என்பவருக்கு சொந்தமானது என்று போலீசாருக்கு தெரியவந்துள்ளது. தனிபடை கொண்ட போலீசார் குணசேகரனை கைது செய்த பின்னர் பீகாரை சேர்ந்த விஜயகுமார் என்பவரையும் கைது செய்த விசாரித்தனர். இருவரும் கூட்டாளிகள் கொள்ளைக்காரர்களாம். விஜயகுமார் வாட்ச்மேன் ஆக வேலை செய்து வந்த நிலையில் சில நாட்களாக குணசேகரனுடன் சுற்றி வந்துள்ளார். மேரி ஜூலியான விடம் கொள்ளையடித்த நகையை விற்று 38 ஆயிரம் ரூபாய் வாங்கி செலவு செய்ததாக ஒப்புக்கொண்டனர்.
மீதம் இருந்த நகையை போலீசார் கைப்பற்றி வைத்துள்ளனர். மேலும் விஜயகுமாரின் வீட்டை சோதித்த போது துப்பாக்கி மற்றும் 18 தோட்டாக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார். பீகாரை சேர்ந்த விக்ரம் குமார் என்ற இளைஞன் தான் விஜயகுமாருக்கு இருபதாயிரத்துக்கு துப்பாக்கி விற்பனை செய்துள்ளான். இதைக் குறித்து மூவரையும் கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து வருகின்ற 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். மேலும் கள்ளத் துப்பாக்கி விற்பனை குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது போன்ற கொள்ளை மற்றும் துப்பாக்கி வைத்திருப்பதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
