அதிமுக இப்படியே போனா 4வது இடத்தை கூட பிடிக்க முடியாது… புதிய பரபரப்பை கிளப்பிய புகழேந்தி…!

By Divyamayakannan on புரட்டாதி 2, 2025

Spread the love

திருநெல்வேலியில் பல நிகழ்ச்சிக்கு வருகை தந்த பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். விஜய் மாநாடு எழுச்சி ஏற்படுத்தியது. விஜய் தான் ஆட்சிக்கு வருவார் என்று இளைஞர்கள் உறுதி கொடுத்து வருகிறார்கள். தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் சென்றால் மட்டுமே அவருக்கு ஆதரவு அதிகரிக்கும். எடப்பாடி பழனிச்சாமி என்னுடைய முதுகில் குத்தி விட்டார் என்று தேமுதிக பொதுசெயலாளர் கூறி வருகிறார். இதை நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் இருப்பினும் அவர்கள் எம்.பி பதவிக்கு ஆசைப்பட்டு இத்தனை ஆண்டுகள் அவருடன் பயணித்துள்ளார்கள். தேமுதிக வெளியேறிய நிலையில் அமமுகவை வெளியேற்றி விடுவார்கள்.

ஜெயலலிதா, எம்ஜிஆர், விஜயகாந்த் போன்ற அரசியல் தலைவர்களுக்கு தானாகவே கூட்டம் கூடியது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி காசை கொடுத்து கூட்டத்தை சேர்க்கிறார். அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிச்சாமிகும் எப்பவும் ஒட்டவே ஒட்டாது. அதிமுகவில் இருந்து நிறைய பேர் வெளியேறி விட்டார்கள்.அதிமுக இப்படியே போனா 4வது இடத்தை கூட பிடிக்க முடியாது. இது திமுகவுக்கு சாதகமாக ஆகிவிட்டது. கண்டிப்பாக இந்த நிலை நீடித்தால் திமுக வெற்றி பெறும். சீமானுடன் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு போட்டி. டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டத்தில் இருந்து வெளியேறி தவெக அணியில் சேர நினைக்கிறார். அதிமுகவின் சின்னம் தொடர்பான வழக்கு ஜனவரி மாதம் விசாரணைக்கு வரவுள்ளது. அதிமுகவின் இரட்டை இலை இப்போது ஆட்டத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.