BREAKING: 2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமனம்… தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

By Nanthini on புரட்டாதி 2, 2025

Spread the love

தமிழகத்தில் 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கலாம் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. நேரடி நியமனம் செய்யும் அரசின் இந்த முடிவை எதிர்த்து ஆசிரியர் அல்லாத பணியில் இருப்பவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். தங்களுக்கு சேர வேண்டிய இரண்டு சதவீதம் ஒதுக்கீடு வழங்காமல் மற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கக்கூடாது என்றும் நேரடி தேர்வு நடத்தி 2,500 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பணிநியமனம் செய்யப்படவில்லை என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமனம் வழங்கலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.