தனது படங்களுக்கு பிரேக் விட்டுவிட்டு, கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் நடிகர் அஜித். அவர் வெளிநாடுகளில் பல கார் ரேசில் கலந்து கொண்டாலும், அவரைப் பார்க்க அங்கு பெரிய ரசிகர் பட்டாளமே வருகிறது. மேலும் மீடியாக்களும் அவரைப் பற்றி அதிகம் பேசுகின்றனர்.
இது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த அஜித், “என்னை ரொம்ப ப்ரொமோட் செய்யாதீங்க…மோட்டார் ஸ்போர்ட்ஸை ப்ரொமோட் பண்ணுங்க…” என வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் சென்னை சேர்ந்த 13 வயது ரேசர், ஜேடன் இமானுவேலிடம் நடிகர் அஜித் குமார் ஆட்டோகிராப் வாங்கி இருக்கிறார். இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது
