ஜெப்ரி எப்ஸ்டீன் தனது தற்கொலை முயற்சிக்கு சில நாட்களுக்கு முன்பு எழுதிய ஒரு குறிப்பில், சிறைச்சாலையில் உள்ள உளவியலாளர்களைக் கடுமையாகச் சாடியிருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தத் தறிப்பில், “என்னை அழச் சொல்லுகிறீர்களா? நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என ஏளனமாக அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தான் மன அழுத்தத்தில் இல்லை என்றும், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தனக்கில்லை என்றும் அவர் அந்தக் குறிப்பில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டில் கைதாகி நியூயார்க் சிறையில் இருந்த எப்ஸ்டீன், தனது முதல் தற்கொலை முயற்சிக்குப் பிறகு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் எழுதிய இந்தக் குறிப்புகள், சிறை அதிகாரிகளுக்கும் அவருக்குமான முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, ஒரு கைதியாகத் தன்னை நடத்துவதை அவர் விரும்பவில்லை என்பதும், சிறை உளவியல் நிபுணர்களின் கேள்விகள் அவருக்கு எரிச்சலூட்டியதும் இந்தக் குறிப்புகள் மூலம் தெரியவருகிறது.
இறுதியாக, 2019 ஆகஸ்டில் அவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அமெரிக்க சிறைத்துறையின் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்த பெரும் விவாதத்தைக் கிளப்பியது. எப்ஸ்டீனின் மரணத்தைச் சுற்றி இன்றும் பல்வேறு மர்மங்களும் சதித் திட்டங்களும் பேசப்பட்டு வரும் நிலையில், அவர் கைப்பட எழுதிய இந்தக் குறிப்புகள் அவரது கடைசி நாட்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு முக்கிய ஆவணமாகப் பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகையை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்…
ஹைதராபாத் பாலநகர் மேம்பாலம் அருகே வியாழக்கிழமை மதியம் 3.30 மணியளவில் சோகமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. ஷாபூரிலிருந்து அமீர்பேட்டையிலுள்ள தனது…
கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய 67 வயதான லக்ஷ்மம்மா என்ற மூதாட்டி, மீண்டும் வீடு திரும்பவில்லை.…
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…