தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெயம் ரவி. சினிமாவில் பிஸியாக இருக்கும் ஜெயம் ரவி 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ் தனது தந்தை ஜெயம் ரவியுடன் இணைந்து டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மறுப்பு தெரிவித்த ஆர்த்தி ஜெயம் ரவி தன்னுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்த முடிவு எனவும் இதில் குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் தன்னுடைய மகன் ஜெயம் ரவி பற்றி மோகன் ராஜா நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அதில், ரவி பிறந்த பிறகுதான் என்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் வந்தது. அவனுக்கு ஆறு வயது இருக்கும் போதே பரதநாட்டியம் சேர்த்து விட்டேன். 12 வயதில் ஒரு அரங்கேற்றம் செய்தார். அப்போது கவிஞர் வைரமுத்து தலைமையில் நடந்த அந்த நிகழ்ச்சியில் ரவியை பார்த்து ஒரு நடிகனை தயாரித்து வைத்திருக்கிறார் என்று சொன்னார். அதன் பிறகு 12 வயதில் பரதநாட்டியம் கிளாசை நிறுத்தி விட்டேன்.

காரணம் அதற்குப் பிறகு பரதநாட்டியத்தை தொடங்கினால் நடை மாறிவிடும் என்று நினைத்தேன். அப்போதே அவரின் நடையில் சிறு மாற்றம் தான் இருந்தது. ஆனால் அப்போது கனல்கண்ணன் உட்பட பலர் என்னிடம் இருந்ததால் அவர்களிடமிருந்து தான் குதிரை ஏற்றம், சண்டை பயிற்சி எல்லாம் ஜெயம் ரவி கற்றுக்கொண்டு ராஜா மாதிரி இருந்தார் என்று மோகன் ராஜா தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜெயம் ரவியின் வாழ்க்கை அவர் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படம் போல தான் இருந்துள்ளது. அதாவது தன்னுடைய மகனை எப்படியாவது நடிகன் ஆக்கி விட வேண்டும் என்று அவருடைய தந்தை மிகவும் முயற்சி செய்து தான் அவர் இந்த இடத்திற்கு வந்துள்ளார்.
