தாரை தப்பட்டை ஆனந்தியா இது?.. 2 குழந்தைக்கு தாயான பிறகும் கிளாமர் லுக்கில் இப்படி கலக்குறாங்களே..!

By Nanthini on ஐப்பசி 4, 2024

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நடன நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்தான் ஆனந்தி.

   

சிவகார்த்திகேயன் போட்டியாளராக பங்கு பெற்ற பாய்ஸ் Vs கேர்ள்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் இவர் சிவகார்த்திகேயனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று அந்த சமயத்தில் பெரும் வைரலாக பரவியது.

   

 

அதன் பிறகு தொலைக்காட்சியில் சீரியல் தொடர்களில் நடிக்க தொடங்கினார். கார்த்திகை பெண்கள், கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், கனா காணும் காலங்கள் என்று தமிழில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர் வெள்ளித் துறையிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதாவது தாரை தப்பட்டை, மீகாமன், ராஜா மந்திரி வாலு போன்ற திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் தமிழில் ரௌத்திரம், டமால் டுமீல், மீகாமன் போன்ற ஒரு சில படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்த இவர் இறுதியாக பறந்து செல்ல வா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து வேறு எந்த திரைப்படத்திலும் இவர் நடிக்கவில்லை. தொடர்ந்து சீரியல்களில் பிஸியாக நடித்து வந்த ஆனந்தி கடந்த 2017 ஆம் ஆண்டு அஜய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுடைய திருமணம் ஆந்திராவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிகளுக்கு அழகான இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகும் சின்னத்திரை பக்கம் வராமல் கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்ட ஆனந்தி பிறகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜபார்வை என்ற தொடரில் எண்ட்ரி கொடுத்தார்.

தற்போது மீண்டும் சீரியல்களில் இவர் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம்.

அதன்படி தற்போது ரசிகர்களை மயக்கும் கியூட்டான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.