விவாகரத்துக்கு பின்பு ரொம்ப பிஸி.. ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் 4 படங்கள்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

By Soundarya on ஜனவரி 9, 2025

Spread the love

ஜெயம் ரவிக்கு கடந்த வருடம் வெளியான படங்கள் எதுவுமே பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அதிலும் தன்னுடைய விவகாரத்தை அறிவித்ததோடு அவர் ஏகப்பட்ட சர்ச்சையிலும் சிக்கினார். அதையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் பிஸியாகிவிட்டார். அதன்படி இந்த வருடம் அவருக்கு அமோகமான வருடமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த வருடம் கடைசியாக பிரதர் படத்தில் நடித்தார். ஆனால் படம் தோல்வியையே சந்தித்தது.

   

தற்போது ஆரம்பமே அமர்க்களம் என்ற ரீதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காதலிக்க நேரமில்லை படம் ரிலீஸ் ஆகிறது. உதயநிதி ஸ்டாலின் மனைவி  கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மேனன் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் . முழுக்க முழுக்க காதல் ரொமான்டிக் கலந்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருக்கிறது.

   

 

அதனை அடுத்து வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடத்துள்ள ஜூனி என்ற இந்த படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் படமாக இந்த படம் உருவாகியுள்ளது . இதில் ஜெயம் ரவியோடு இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி தேவையானி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் ஜெயம்ரவியின் 34 ஆவது படத்தின் பூஜையும் கடந்த மாதம் போடப்பட்டது.

இயக்குனர் கணேஷ் பாபு இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது . அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் sk25 படத்தில் ஜெயம் ரவி வில்லனாகவும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.  60களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்திய கதைதான்.  இது பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. இப்படி ஜெயம் ரவியின் கைவசம் இருக்கும் படங்கள் ஒவ்வொன்றும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது .