விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவரைப் போலவே இவருடைய அக்கா பிரியதர்ஷினியும் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் பிரபலமானவர்தான். இவரும் மீடியா துறையில் மிகப் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்தவர். தமிழ் திரை உலகில் தாவணி கனவுகள், இதயக்கோவில் மற்றும் மலையாளத்தில் கூட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து தமிழில் ரகுமானின் கல்கி என்ற படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்திருந்தார். பிறகு புலி வருது, காளிதாஸ் ஆகிய இரண்டு தமிழ் திரைப்படங்களிலும் நடித்தார்.
சினிமாவில் வரவேற்பு கிடைத்ததும் அக்னி பரீட்சை, எத்தனை மனிதர்கள், விழுதுகள், கோலங்கள், வசந்தம் மற்றும் மை டியர் பூதம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். இறுதியாக இவர் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலிலும் ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
எதிர்நீச்சல் 2 சீரியலிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படி சீரியல்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் பிரியதர்ஷினி ஹாட் & கூல் மீடியா என்ற youtube சேனலில் தொடர்ந்து திரைப்படங்களை விமர்சனம் செய்து வருகிறார்.
இதுவரை இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இதனிடையே பிரியதர்ஷினி ரமணா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ரிஷி என்ற மகனும் உள்ளார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்ட பிரியதர்ஷினி தற்போது மீண்டும் சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிரியதர்ஷினி மகன் ரிஷியின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதனைப் பார்த்த ரசிகர்கள் எதிர்நீச்சல் ரேணுகாவுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்காரா என கேட்டு வருகிறார்கள்.