கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் dominic and the ladies’ purse. இந்த திரைப்படத்தில் மம்முட்டி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த திரைப்படமானது வருகிற 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயிருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு கௌதம் மேனன் யாரை வைத்து புதிய படத்தை எடுக்க போகிறார் என்று இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

ஆனால் வெற்றிமாறன் உடைய கதையை வைத்து கௌதம் மேனன் இயக்கப் போவதாக தகவல் ஒன்று வெளியானது. மேலும் இந்த படத்தில் சிம்பு நடிக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தில் நடிப்பது சிம்பு இல்லை நடிகர் ஜெயம் ரவி தான் இந்த படத்தின் ஹீரோ என்றார்கள். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய அடுத்த படம் குறித்து இயக்குனர் கௌதம் பேசியுள்ளார்.

அதாவது “வெற்றிமாறன் கதையை வைத்து படம் இயக்குவதற்கான பேச்சுக்கள் போய்க் கொண்டிருக்கிறது. அது மிகவும் சுவாரசியமான கதை. இந்த படத்தில் ஹீரோவாக ஜெயம் ரவி நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்று கூறியுள்ளார். விரைவில் இதற்கான அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
