பா ரஞ்சித் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் சிவசண்முகத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் பா ரஞ்சித். அதற்குப் பிறகு வெங்கட் பிரபுவுடன் இணைந்து பணியாற்றினார்.

பின்னர் 2012 ஆம் ஆண்டு “அட்டகத்தி” என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பா ரஞ்சித். அதைத்தொடர்ந்து மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து ரஜினிகாந்த் உடன இணைந்து கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கினார் பா ரஞ்சித். கடந்த ஆண்டு இவர் இயக்கிய தங்கலான் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.
இயக்கம் மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, பொம்மை நாயகி, Blue Star போன்ற திரைப்படங்களை தனது நீலம் ப்ரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்திருக்கிறார் பா ரஞ்சித்.
தற்போது பா ரஞ்சித் தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பாட்டில் ராதா என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா ரஞ்சித் தனது அப்பாவை பற்றி மிகவும் கண்கலங்கியபடி பேசி இருக்கிறார்.

அவர் கூறியது என்னவென்றால் நான் 12வது படிக்கும்போது தற்கொலைக்கு முயன்றேன். அதற்கு காரணம் என் வீட்டில் பல பிரச்சனை என் அம்மா அழுது கொண்டே இருப்பார். என் அப்பா எங்களை மிகவும் நன்றாக வைத்துக்கொண்டார். ஆனால் அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடித்தால் அவருக்கு என்ன செய்வது என்று தெரியாது. அதனால்தான் எங்களுக்கு கஷ்டமாக இருந்தது. அப்போது நான் தற்கொலைக்கு முயன்று எப்படியோ மீண்டு வந்து விட்டேன். இப்போது நான் இந்த இடத்திற்கு வந்த பிறகு என் அம்மா பட்ட கஷ்டத்தை என் மனைவியும் பிள்ளைகளும் படக்கூடாது என்று நினைக்கிறேன். என் வளர்ச்சியை என் அப்பா பார்க்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர் அதிகம் குடித்ததால் லிவர் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார் என்று கண் கலங்கி பேசியிருக்கிறார் பா ரஞ்சித்.
