கௌதம் வாசுதேவ் மேனன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் கதாசிரியர் தயாரிப்பாளர் மற்றும் நடிகராவார். ஆரம்பத்தில் ராஜு மேனனுக்கு உதவியாளராக பணிபுரிந்தார் கௌதம் வாசுதேவ் மேனன். 2001 ஆம் ஆண்டு மாதவனை வைத்து மின்னலே என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் கௌதம் வாசுதேவ் மேனன். முதல் படமே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

அடுத்ததாக 2003 ஆம் ஆண்டு சூர்யா ஜோதிகாவை வைத்து காக்க காக்க திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் வெற்றி பெற்று அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், என்னை நோக்கி பாயும் தோட்டா, வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.
ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு இவர் இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை. இந்த ஆண்டு எப்படியாவது வெளியாகிவிடும் என்று கூறுகிறார்கள். அதைப் பற்றியும் மற்றும் பல படங்களை பற்றியும் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.

அந்த நேர்காணலின் போது நிருபர் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை பற்றி கேட்கையில் நான் அந்த படத்தை இயக்கவில்லை என்று ஒரே போடாய் போட்டுவிட்டார் கெளதம் வாசுதேவ் மேனன். அதற்கு காரணம் அந்த படத்தை இயக்கும்போது தனுஷுக்கும் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் இடையே பல பிரச்சினைகள் எழுந்தது. படம் தயாரிப்பில் Delay ஆனது. அதேபோல் படம் இயக்கும் போதும் சரியான ஸ்கிரிப்ட் இல்லாமல் ஆரம்பித்து விட்டார் இவர் என்று கூறி வந்தனர். இதனால் தனுசுக்கும் இவருக்கும் இடையே பிரச்சனை இருப்பதால் அந்த படத்தை பற்றி நாம் பேசக்கூடாது என்ற நோக்கதிலேயே அந்த படத்தை நான் இயக்கவில்லை என்று பிளேட்டை திருப்பி போட்டுவிட்டார் கௌதம் வாசுதேவ் மேனன்.
