பிரபல நடிகர் ஆன குரு சோமசுந்தரம் ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு பாண்டியநாடு, ஜிகர்தண்டா, ஜோக்கர், வஞ்சகர் உலகம் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் சினிமாவின் ஹீத் லெட்ஜர் என குரு சுந்தரம் அழைக்கப்படுகிறார். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் சோமசுந்தரம் நடித்துள்ளார்.

தமிழ் சினிமா தந்திருக்கும் இயல்பான நடிகர்களில் ஒருவர் இவர்தான். எந்த கேரக்டருக்குள்ளேயும் தன்னை அப்படியே இணைத்துக் கொள்வது தான் அவருடைய பலம். நாயகன், வில்லன், குணச்சித்திரம் என மாறி மாறி வரும் அவர், மோகன்லால் இயக்கி, நடிக்கும் ‘பரோஸ்’ படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் பேசிய பேட்டி ஒன்றில், “ஆரண்யகாண்டம் படத்தில் ஒரு சீன் பலமுறை எடுக்கப்பட்டது .குமாரராஜா பொறுத்தவரைக்கும் எனக்கு இதுதான் வேணும் அது கிடைக்குற வரைக்கும் விட மாட்டாரு. அந்த சீன் எடுக்குறப்போ நான் ஷூட்டிங்க் ஸ்பாட்லயே அழுத்திட்டேன். ஆனா அவரு நீங்க நல்லா பண்ணுறீங்க. அதனால இன்னும் கொஞ்சம் பண்ணுன நல்லா இருக்கும்னு சொல்லி பண்ண வச்சாரு” என்று கூறியுள்ளார்.
