சர்ச்சைக்கு மேல் சர்ச்சை…. நடிக்கும் போது சரி தொழிலதிபர் ஆன பிறகும் கூடவா… தொடரும் நயன்- விக்கி விவகாரம்…

By admin on தை 19, 2025

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக புகழ் பெற்ற நடிகையாக இருப்பவர் நயன்தாரா. எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் சினிமாவிற்குள் வந்து தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர். ஆரம்பத்தில் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் நயன்தாரா. அதன்மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

   

ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் நயன்தாரா. அதைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டு சந்திரமுகி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார் நயன்தாரா.

   

தொடர்ந்து சிம்பு அஜித் விஜய் என பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார் நயன்தாரா. அதுமட்டுமில்லாமல் நாயகன் இல்லாத நாயகி கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து பெயர் பெற்றார். அதனால் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று மக்கள் அழைக்கின்றனர்.

 

நடிப்பது மட்டுமல்லாமல் நயன்தாரா பலவித பிசினஸ்களில் முதலீடு செய்து இருக்கிறார். 9 Skin, Femi 9 ,The Lipbalm Company போன்ற பல பிசினஸ்களில் பார்ட்னர்களாக இருக்கிறார். அதில் சமீபத்தில் Femi 9 பிசினஸ் இன்ஃப்ளூன்சர் மீட் சமீபத்தில் மதுரையில் நடைபெற்றது.

இந்த Influencer மீட்டில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மிகவும் லேட்டாக வந்ததாகவும் அவர்களின் ஆட்டிடியூட் சரியில்லை எனவும் ஒரு இன்ஃப்ளூயன்சர் எக்ஸ் த பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்து இருந்தார். ஆனால் தற்போது சில நாட்கள் கழித்து அதே Influencer வேறொரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறியது, நான் போட்ட வீடியோவை ரிப்போர்ட் செய்து தூக்கி விட்டார்கள். அது மட்டுமில்லாமல் நீங்கள் இப்படி பேசினால் எங்கள் பெயர் கெட்டுப் போகும் உங்களுக்கு நாங்கள் பணம் தருகிறோம் என்று கூறினார்கள் என்று பேசி இருக்கிறார். ஆனால் மறுபக்கம் அதே மீட்டிங்கில் கலந்து கொண்ட மற்றொரு தேனியை சேர்ந்த Influencer அதெல்லாம் ஒன்றும் கிடையாது நயன்தாரா விக்னேஷ் சிவன் அன்பாக நடந்து கொண்டார்கள் என்று கூறுகின்றனர். இதில் எது உண்மை என்று தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் என்பது மட்டும் தெரிகிறது.