விவாகரத்து அறிவித்த கையோடு புது படத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட ஜெயம் ரவி.. மாஸ் இயக்குனரோடு செய்யப்போகும் சம்பவம்..!!

By admin on புரட்டாதி 11, 2024

Spread the love

பிரபல நடிகரான ஜெயம் ரவி மோகன் ராஜா இயக்கத்தில் உருவான ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு பல வெற்றி படங்களில் ஜெயம் ரவி நடித்தார்.

   

கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படங்கள் அவ்வளவாக மக்களிடையே வரவேற்பை வரவில்லை. தற்போது மூன்று திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் பிரதர், புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் உருவாகும் ஜெனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகும் காதலிக்க நேரமில்லை ஆகிய திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

   

 

இந்த மூன்று படங்களின் படப்பிடிப்புகளும் விரைவில் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் பிரபல இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி தனது அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். தற்போது கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவின் 44-வது படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

அந்த படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் ஜெயம்ரவியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க உள்ளார். சமீப காலமாக தோல்வி படங்களை கொடுத்த ஜெயம் ரவி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மீண்டும் வெற்றியை எட்டி பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா பாதிப்பு: கார்த்திக் சுப்புராஜ் நிதியுதவி! | nakkheeran