தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் ஜீவா. இன்று தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேலத்தில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இவர் தனது மனைவியுடன் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இன்று வந்து கொண்டிருந்த போது காரில் அவர் சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குறுக்கே இரு சக்கர வாகனத்தில் ஒருவர் வந்துள்ளார். இதனால் அவர் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக ஜீவா தன்னுடைய காரை திரும்பினார்.
அப்போது சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரின் மீது கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக நடிகர் ஜீவா மற்றும் அவருடைய குடும்பத்தினர் லேசான காயத்தோடு உயிர் தப்பி இருக்கின்றனர். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது.