கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர் விதார்த், அமலாபால், தம்பி ராமையா மற்றும் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மைனா. இந்த திரைப்படத்தின் தன்னுடைய அற்புதமான நடிப்பை நடிகர் விதார்த் வெளிப்படுத்தியிருந்தார். இந்தத் திரைப்படம் இவருடைய சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது என்று கூறலாம். 2001 முதல் சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் திருவண்ணாமலை திரைப்படத்தின் மூலமாக வில்லன் நடிகராக அறிமுகமானார்.

தொடர்ந்து இவர் கதாநாயகனாக மைனா திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். மேலும் இவர் மௌனம் பேசியதே, சண்டக்கோழி, கொக்கி, திருப்பதி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இறுகப்பற்று படத்தில் அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். கடைசியாக இவர் நடிப்பில் ஜூன் மாதம் வெளியான படம் அஞ்சாமை.

Actor Vidharth’s 7Yrs old Daughter 👌👍💥 pic.twitter.com/Xno4zFCQB4
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 11, 2024
