Connect with us

CINEMA

தன்னுடைய படத்தையே தியேட்டர் சென்று பார்க்க முடியாத சூழலில் நின்ற நடிகை ஜெயலலிதா.. எதனால் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்தவர் மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகருமான ஜெயலலிதா. வெண்ணிற ஆடை படத்தின் மூலம் அறிமுகமான ஜெயலலிதா வெகு விரைவிலேயே அப்போது உச்சத்தில் இருந்த எம் ஜி ஆருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

ஜெயலலிதாவின் நடிப்பு திறமையில் கவரப்பட்ட எம் ஜி ஆர், அவரை தன்னுடைய பல படங்களில் பயன்படுத்தினார். எம் ஜி ஆரோடு அதிக படங்களில் கதாநாயகியாக இணைந்து நடித்தவர் ஜெயலலிதாதான். இருவரும் இணைந்து 28 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

   

ஜெயலலிதா முதல் முதலில் நடித்த தமிழ் திரைப்படம் என்றால் அது ஜாம்பவான் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளியான ‘வெண்ணிற ஆடை’ திரைப்படம்தான். ஸ்ரீதரின் பல படங்களைப் போலவே இதுவும் ஒரு முக்கோணக் காதல் திரைப்படமாகதான் உருவானது.

இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்க நிர்மலா மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்தனர். இந்த படம் ஒரு மனநல நிபுணர் நோயாளியான ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து குணமாக்குகிறார். இதனால் ஜெயலலிதா கதாபாத்திரம் கதாநாயகன் மேல் காதல் வயப்படுகிறது. ஆனால் அவர் ஏற்கனவே வேறொரு பெண்ணைக் காதலித்து வருகிறார். ஆனால் ஒருவேளை தன் ஷோபாவின் காதலை நிராகரித்தால் மீண்டும் அவர் மனநல பாதிப்புக்கு ஆளாகி விடுவாரோ என்று அஞ்சுகிறார். இந்த முக்கோணக் காதல் கதை எப்படி முடிகிறது என்பதே மீதிப்படம்.

1965 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸான இந்த திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் பல ரொமாண்டிக்கான மற்றும் கிளாமர் உடை காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஜெயலலிதா கதாபாத்திரம் அருவியில் குளிப்பது போன்ற காட்சி ஒன்றும் இருந்தது. அதனால் இந்த படம் சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்றிருந்தது. அப்போது ஜெயலலிதாவுக்கு 16 வயதுதான் ஆகியிருந்தது என்பதால் அவரால் இந்த படத்தை திரையரங்கில் சென்று பார்க்க முடியாத சூழலே நிலவியது.

Continue Reading

More in CINEMA

To Top