விஜயின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் இருந்த சிக்கல்கள் தற்போது சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளன. படத்திற்கு சென்சார் சான்றிதழ் கோரி தொடரப்பட்ட வழக்கை தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற்றுள்ள நிலையில், படம் தற்போது தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழுவிற்கு (Review Committee) அனுப்பப்பட்டுள்ளது. இந்த குழு அடுத்த 20 நாட்களுக்குள் தணிக்கை நடைமுறைகளை முடித்து சான்றிதழ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இழுபறியில் இருந்த படத்தின் வெளியீடு தற்போது உறுதியாகியுள்ளது. இதன் மூலம், அரசியல் பின்னணி கொண்ட இத்திரைப்படம் இம்மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத தொடக்கத்திலோ திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிகிறது.
