பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவராக அன்புமணி ராமதாஸ் தான் நீடிக்கிறார் என்பதை தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் உறுதி செய்துள்ளது.பாமக நிறுவனர் எஸ். ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கட்சித் தலைமை மற்றும் ‘மாம்பழம்’ சின்னம் குறித்து பிரச்சினை நிலவி வருகிறது. கட்சியின் தலைவராகத் தன்னையே அங்கீகரிக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது.
இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம், தங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில், கட்சியின் தலைவராக 2026 ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை அன்புமணி ராமதாஸ் நீடிப்பதாகத் தெரிவித்துள்ளது. கட்சிப் பிரச்சினை எழுவதற்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியது.தேர்தல் ஆணையத்தின் இந்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து, ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம், பாமகவின் பெயரும், கொடியும், சின்னமும் அன்புமணி தலைமையிலான பாமகவுக்குச் சொந்தமானது என்பது உறுதியாகியுள்ளது
