நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த மாதம் 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் சென்சார் பிரச்னை காரணமாக அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. இப்போது ரீவைசிங் கமிட்டி அந்த படத்தை பார்த்துவிட்டு ஓகே சொன்னால்தான் படம் ரிலீஸ் ஆகும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி ஜனநாயகன் படம் ரீவைசிங் கமிட்டியின் பார்வைக்கு செல்ல படக்குழு ஏற்பாடுகளை செய்துவிட்டது.
ஆனால் இன்னும் ரீவைசிங் கமிட்டி ஜனநாயகன் படத்தை பார்க்கவில்லை. ரீவைசிங் கமிட்டிக்கு ஒரு படம் சென்றால் 18 நாட்களுக்குள் அதை பார்த்துவிட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் 21 நாட்களாகியும் இன்னும் படத்தை பார்க்காமல் விதிமுறையை ரீவைசிங் கமிட்டி காற்றில் பறக்க விட்டுள்ளது. மேலும் ரீவைசிங் கமிட்டி பார்க்க வேண்டிய படங்கள் 4 இருப்பதாகவும் அதில் ஜனநாயகன் படம் 2வது என்றும் முதல் படத்தை பார்த்த பிறகே, ஜனநாயகன் படத்தை ரீவைசிங் கமிட்டி பார்க்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
