சிலரை அறிமுகப்படுத்தும் போது அவரை என்ன சொல்லி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பம் வரும். அந்த அளவுக்கு பல துறைகளில் தங்கள் திறமையைக் காட்டிலும் அனைத்திலும் சாதித்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் ஜேம்ஸ் வசந்தன். மெல்லிசைக் குழு நடத்துனராக, இசைப் பயிற்சியாளராக, தமிழ் ஆர்வலராக, நிகழ்த்தித் தொகுப்பாளராக, இசையமைப்பாளராக, பாடல் ஆசிரியாக, இயக்குனராக பல முகங்கள் கொண்டவர் ஜேம்ஸ் வசந்தன்.
இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்ற கனவோடு சென்னை வந்த ஜேம்ஸ் வசந்தன் முதலில் இசை நிகழ்ச்சி தொகுப்பாளராக சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் டாப் 10 மூவிஸ் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
அதன் பின்னர் அவர் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியது, அவரிடம் பள்ளி காலத்தில் இசைப் பயின்ற மாணவரான சசிகுமார்தான். சுப்ரமண்யபுரம் படத்தில் தன்னுடைய வித்தியாசமான இசையால் முத்திரைப் பதித்த ஜேம்ஸ் வசந்தன் பெரிய இசையமைப்பாளராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதன் பிறகு பெரியளவில் படங்களுக்கு இசையமைப்பதில்லை. இந்நிலையில் சமீபகாலமாக அவர் இசையமைப்பாளர் இளையராஜாவைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

#image_title
அதேபோல இப்போது அனிருத்தையும் விமர்சிக்க தொடங்கி, அவரது ரசிகர்களிடம் கெட்ட பெயர் வாங்கத் தொடங்கியுள்ளார். சமீபகாலமாக தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இசையமைப்பாளராக அனிருத் இருக்கிறார். ரஹ்மானை விட அவர் அதிகமாக சம்பளம் பெறுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அனிருத் பற்றி பேசிய ஜேம்ஸ் வசந்தன் “அனிருத் பாட்டு தமிழ் சினிமாவில் மட்டும்தான் ஹிட்டாகுது. இந்தி தெலுங்கில் எல்லாம் அவர் பாட்டு ஹிட்டாகவில்லை.ஆனால் ரஹ்மான் உலகளவில் ரீச்சாகி இருக்கிறார். அவருடைய இடத்தை யாராலும் தொட முடியலை.
அனிருத் இசை ரஹ்மான் இசைக்கு சேலஞ்சிங்கா இல்லை. வேற வழி இல்லாமதான் அவர் பாட்டு ஹிட்டாகுது. ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர்களும் அவரிடம் செல்கிறார்கள். ஆனாலும் இந்திய அளவில் நம்பர் 1 இசையமைப்பாளர் என்றால் அது ரஹ்மான்தான்” எனக் கூறியுள்ளார்.
