என்னை ஏன் தேர்தெடுத்தீங்க..? அதுக்கு சரியான ஆளு நீதான்னு சொன்ன விஜய்…. TVK கொள்கை பாடலை பாடியது இவரா…???

By Soundarya on ஐப்பசி 28, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் விஜய் கடைசியாக கோட் படத்தில் நடித்து முடித்த நிலையில் தளபதி 69 படத்தில் மட்டும் அடுத்து நடித்து விட்டு அதன்பிறகு சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனால் ரசிகர்கள் கவலையுடன் இருந்தாலும் மறுபுறம் அரசியலில் இறங்கியுள்ளதால் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

#image_title

இவருடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நேற்று மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. லட்சோப லட்ச கூட்டம் வந்து அலைமோதியது. தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் வந்து பல லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.

   
   

#image_title

 

tvk தலைவர் விஜய் ஆனந்த கண்ணீர் சிந்தும் அளவிற்கு தொண்டர்களின் அன்பு அந்த இடத்தில் நிறைந்திருந்தது. இவ்வளவு நாள் விக்ரவாண்டியின் கனமழை கொளுத்தி எடுத்த நிலையில் மாநாட்டிற்காக அந்த கருணை பகவானே கருணை காட்டியதுபோல் மழையும் பெய்யவில்லை. ஆனால் வெயில் மட்டும் இருந்தது. அந்த வெயிலையும் பொருட்படுத்தாமல் விஜய்க்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் காத்திருந்தனர்.

#image_title

இதனைத் தொடர்ந்து மாநாட்டுக்கு வந்த விஜய் மூத்த தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு கட்சி கொடியை ஏற்றினார்.  இந்நிலையில் த.வெ.க கட்சியின் கொள்கைப் பாடலை இயற்றிய தெருக்குரல் அறிவு வெளியிட்டுள்ள பதிவில், ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று விஜயிடம் கேட்டேன். அதற்கு அவர் “இதை செய்ய உன்னால் மட்டும்தான் முடியும்” என்றார். என்னை நம்பிய விஜய் சாருக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.