“கங்குவா” அந்த டாப் நடிகருக்கு எழுதப்பட்ட கதையா…? சிறுத்தை சிவா தான் சூர்யாவுக்கு கொடுத்துட்டாராம்…!!

By Soundarya on ஐப்பசி 28, 2024

Spread the love

2024ம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த  5 திரைப்படங்களில் ஒன்று சூர்யாவின் கங்குவா திரைப்படம். பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமான விஸ்வாசத்தை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன் தயாரிக்கிறது.

#image_title

இந்த படத்தில் நடிகர் சூர்யா மொத்தம் ஏழு வேடங்களில்  நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கங்குவா’. 38 மொழிகளில், 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். படம் நவ.14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதற்கான ப்ரோமோஷன் வேலைகள் ஒரு புறம் நடைபெற்று வருகிறது.

   
   

#image_title

 

கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆடியோ லாஞ்சு நடைபெற்றது. இந்த படம் குறித்து முக்கிய தகவல் ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதாவது அண்ணாத்த பட சூட்டிங் நேரத்தில் தனக்காக ஒரு வரலாற்றுப் படம் எழுதுங்கள் என்று சிறுத்தை சிவாவிடம் ரஜினி கேட்டாராம்.

#image_title

ஆனால் அதில் ரஜினி நடிக்க முடியாமல் போனதால் அந்த கதையை தான் சூர்யாவுக்காக சிவா சில மாற்றங்கள் செய்து கங்குவா என்ற பெயரில் படமாக்கி உள்ளார் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.