அறிமுக இயக்குனர் பாரி இளவழகன் ஜமா என்ற படத்தை இயக்கி அவரே நடித்துள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அம்மு அபிராமி, சேத்தன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்று ஜமா திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசானது. தெருக்கூத்து கலையை மையமாக வைத்து படம் இயக்கப்பட்டுள்ளது. பாரி இளவழகன் பஞ்ச பாண்டவர்களை திருமணம் செய்து கொண்ட திரௌபதியாக நடிக்கிறார். இந்த படத்தில் ஹீரோவின் பெயர் கல்யாணம். ஆனால் அவருக்கு கல்யாணமே ஆகவில்லை.

பல வருடங்களாக தமிழர்களின் பாரம்பரியமாக தெருக்கூத்துக்களை திகழ்கிறது. மகாபாரதம், கர்ண மகா பிரபு, வள்ளி திருமணம் உள்ளிட்ட பல்வேறு நாடகங்கள் தெருக்கூத்து கலைஞர்கள் மத்தியில் பிரபலமானது. அதனை மையமாக வைத்து இயக்குனர் படத்தை செதுக்கியுள்ளார். திருவண்ணாமலை பகுதியில் ஜமா தெருக்கூத்து டிராமா ட்ரூப்பை சேத்தன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த குழுவில் ஹீரோ கல்யாணம் திரௌபதியாக நடிக்கிறார்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பெண்களுடனே நடிப்பதால் கல்யாணத்திற்கு பெண்களைப் போன்ற நளினம் அதிகமாக வந்துவிட்டது. இதனாலேயே அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதை கூறுகின்றனர். ஆனால் கல்யாணத்தின் திறமையை தெரிந்து கொண்டு அம்மு அபிராமி அவரை காதலிக்கிறார். தனியாக ஜமா நடத்த வேண்டும் என ஹீரோ கல்யாணம் ஆசைப்படுகிறார். அந்த நேரம் அர்ஜுனன் வேஷம் போட்டு நடிக்க வேண்டும் என கல்யாணம் முயற்சி செய்கிறார். ஆனால் சேத்தன் அவருக்கு எதிராக மாறிவிடுகிறார்.

இறுதியில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதி கதை. அம்மு அபிராமியின் நடிப்பும் அசத்தலாக இருக்கிறது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி கூறுவது சிறப்பு. திரைக்கதையில் ஒரு சில முரண்பாடுகள் உள்ளது. முதல் பாதி கதை மெதுவாக நகர்ந்து இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாக செல்கிறது. இதுவரை ஜமாத் திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது. இனிவரும் நாட்களிலும் கலைஞர்களுக்கு பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

