ஐஸ்கிரீம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பண்டம் என்றால் அதை ஐஸ்கிரீம்தான்.இன்றைய காலகட்டத்தில் கல்யாண முதல் காதுகுத்து, பிறந்தநாள் பார்ட்டி என அனைத்து விசேஷங்களிலும் பரிமாறப்படும் உணவுகளின் இறுதியில் வாழை இலையில் ஒரு ஐஸ்கிரீம் கப்பை வைத்தால் தான் அது முழுமை பெறும் என்றாகிவிட்டது.
அப்படி எல்லா இடத்திலும் ஐஸ்கிரீம் முக்கியத்துவம் பெறுகிறது. ஐஸ்கிரீமில் பல பிராண்டுகள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவின் தலைசிறந்த பிராண்ட் என்றால் அது அருண் ஐஸ் கிரீம் தான். குடும்ப வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய ஒரு சிறுவன் இந்தியாவின் பிரபல அருண் ஐஸ்கிரீம் ஹட்சன் பிராண்டை நிறுவி அனைவரையும் ஆச்சர்யபட செய்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?ஆம் .அவர்தான் அருண் ஐஸ் கிரீமை நிறுவிய ஆர் ஜி சந்திரமோகன் ஆவார். அப்படிப்பட்ட பிரபல அருண் ஐஸ் கிரீம் உருவான வரலாறு என்ன என்பதை இனி காண்போம்.
ஆர். ஜி. சந்திரமோகன் சிவகாசிக்கு அருகில் உள்ள கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய சந்திரமோகன் தனது தந்தை நடத்திய சிறிய மளிகை கடையில் வேலை செய்தார்.ஒரு காலகட்டத்திற்கு பிறகு வறுமையை சமாளிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த சந்திர மோகன், தனது 21 வது வயதில் பரம்பரை சொத்தை விற்று 13 ஆயிரம் ரூபாயை மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஐஸ்கிரீம் விற்கும் தொழிலை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தார்.
சென்னை ராயபுரத்தில் 250 சதுர அடி அளவு கொண்ட ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து தொழிலை தொடங்க முடிவு செய்தார்.1970 ஆம் ஆண்டு அருண் ஐஸ் கிரீம் பிரண்டை உருவாக்கினார். மூன்று உதவியாளர்களை வைத்துக்கொண்டு,ஆறு மூன்று சக்கர சைக்கிள்கள், 15 தள்ளு வண்டிகள் ஆகியவற்றை கொண்டு குச்சி மற்றும் கப் ஐஸ்களை பள்ளி கல்லூரிகளுக்கு அருகே நின்று மாணவர்களுக்கு விற்கத் தொடங்கினார் . இந்த ஐடியா ஒர்க்கவுட் ஆகவே தொழில் தொடங்கி முதல் ஆண்டிலேயே ஒன்றரை லட்சம் வருமானம் ஈட்டினார் சந்திரமோகன்.

ஒரு கட்டத்தில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ஐஸ்கிரீம்களை தொழிற்சாலையில் உருவாக்கி விற்பனை செய்தார் சந்திரமோகன். தனது ஐஸ்கிரீம் தொழிற்சாலையே இரவில் படுக்கை அறையாகவும் பயன்படுத்தி கொண்டார். கூடிய விரைவில் ஐஸ்கிரீம் தொழிலை விரிவாக்க நினைத்த சந்திரமோகன், 1974 ஆண்டுகளில் பெரும்பாலான காலேஜ் கேண்டீன் மற்றும் சந்தைகளில் தனது ஐஸ்கிரீம்களை சப்ளை செய்ய ஆரம்பித்தார்.
1981 ஆம் ஆண்டு 400000 வருவாய் ஈட்டினார் சந்திரமோகன். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருந்தது. ஐஸ்கிரீம் ஒரு சீசனில் மட்டுமே விற்பனை ஆனது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய விரும்பிய சந்திரமோகன் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சேர்ந்து விற்பனை செய்ய ஹட்சன் பிராண்டை உருவாக்கினார். 1985இல் ஹட்சன் மற்றும் அருண் ஐஸ் கிரீம் தமிழ்நாட்டில் அதிகப்படியாக விற்பனை ஆகும் பிரபலமான ஐஸ்கிரீம் பிராண்டாக ஒரு உருவெடுத்தது.

1990 களில் தனது ஐஸ் கிரீம் பிராண்டை கேரளா,ஆந்திர பிரதேஷ், கோவா மற்றும் தென்னிந்தியா முழுவதும் தனது கிளைகளை ஆரம்பித்தார் சந்திரமோகன். கூடவே பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்யும் ஆரோக்கிய பிராண்டையும் உருவாக்கினார். 2000ங்களில் அருண் ஐஸ்கிரீம், ஹட்சன், ஆரோக்கியா இணைந்து ஆயிரம் கோடி பிசினஸ் ஆக மாறியது.
தனது பிராண்டை இன்னும் புதுமையாக மக்களுக்கு கொண்டு சேர்க்க நினைத்த சந்திரமோகன், 2014 ஆம் ஆண்டு ஐபேக்கோ என்ற ஐஸ்கிரீம் பார்லரை உருவாக்கி புதுவிதமான ஃப்ளேவர்களில் கொண்ட ஐஸ்கிரீம்களையும் ஐஸ்கிரீம் கேக்களையும் அறிமுகம் செய்து உலக அளவில் தனது பிராண்டை புகழடைய செய்தார்.
வெறும் மூன்று பேரை வைத்துக் கொண்டு 13,000 சந்திரமோகன் ரூபாயில் ஆரம்பித்த அருண் ஐஸ்கிரீம், இன்று 50 ஆயிரம் ஊழியர்களைக் கொண்டு 8000 கோடி ரூபாய் டன் ஓவர் செய்து வருகிறது. இந்தியாவில் மட்டுமே சுமார் 3000 அருண் ஐஸ் கிரீம் பாலர்கள் உள்ளது. வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு படிப்பு தேவையில்லை, படிக்காமல் இருப்பது தடையில்லை என்பதை உணர்த்தி இன்றைக்கு அனைவரும் உயர்ந்து பார்க்கும்படி செய்துள்ளார் அருண் ஐஸ் கிரீம் நிறுவனர் மற்றும் உரிமையாளர் ஆர் ஜி சந்திரமோகன் என்கிற இந்தியாவின் ஐஸ்கிரீம் மனிதர்.
