பிரபல நடிகையான பார்வதி திருவோத்து பூ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் பூ திரைப்படத்தில் மாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது திரைப்படத்தில் நடித்ததற்காக பார்வதிக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது பேர். முன்னதாக மலையாளத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு ரிலீசான அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து தனுஷ் உடன் ஜோடி சேர்ந்து மரியான் திரைப்படத்திலும் பார்வதி திருவோத்து நடித்துள்ளார்.

கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை பார்வதி தேர்ந்தெடுத்து நடிக்கிறார். பூ, மரியான், பெங்களூர் டேஸ், தங்கபான் என குறைந்த படங்களில் நடித்தாலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தங்கலான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் பார்வதி திருவோத்து நடித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி தங்கம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானதால் தற்போது பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தங்கலான் பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பார்வதி திருவோத்து கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, சில இயக்குனர்கள் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கும். அவர்களுக்காக மட்டுமே படங்களில் நடித்திருக்கிறேன். அப்படித்தான் தங்கலான் படத்தில் நடித்தேன். இதனையடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளினி புகைப்படத்தில் நடித்த பிறகு உங்களுக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என கேள்வி கேட்டார்.

அதற்கு பதில் அளித்த பார்வதி நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. எல்லா வேலையும் கண்ணியமானது தான். இப்போது இருக்கும் சினிமா துறையும் கண்ணியம் இல்லை என்றால் அதிலிருந்து வெளியேறி விடுவேன். எனக்கு சினிமா ஒர்கவுட் ஆகவில்லை என்ற நிலைமை வந்தால் டீக்கடை வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பெரிய பிளான். சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்திருந்தால் டீக்கடை தான் வைத்திருப்பேன் என ஓப்பனாக கூறியுள்ளார்.

