ஆடி மாதம் என்றாலே ஆன்மீக மாதம் தான். அம்மனுக்கு உகந்த மாதமான ஆடியில் பெண் தெய்வங்கள் இருக்கும் அனைத்து கோவில்களும் விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடி பௌர்ணமி அனைத்தும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில் அனைத்து கோயில்களிலும் அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் போன்றவைகள் நடத்தப்படும். வீடுகளிலும் மக்கள் சிறப்பு பூஜைகளையும் ஹோமங்களையும் ஏற்பாடு செய்து நடத்துவர். கோவில்களில் அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்வுகளும் நடக்கும்.
ஆடி மாதத்தில் மிகச் சிறப்பான தினமாக கருதப்படுவது ஆடிப்பெருக்கு ஆகும் இது. ஆடி மாதம் பிறந்து 18 வது நாளில் இது அனுசரிக்கப்படுகிறது. இதை ஆடி18 விழா என்றும் கூறுவர் விவசாயம் செய்வதற்கு ஆதாரமானது நீர் இந்த ஆடி மாதத்தில் புது நீரானது ஆறுகளிலும் நதிகளிலும் பெருக்கெடுத்து ஓடும் அப்படி புதுநீர் வரும்பொழுது மக்கள் ஆற்றங்கரையில் அதை வரவேற்கும் விதமாக மஞ்சள் குங்குமம் மலர் ஆகியவற்றை தூவி வணங்குவார்கள் அப்படி விவசாயத்திற்காக பெருக்கெடுத்து ஓடிவரும் நீரை வணங்கும் நிகழ்வுதான் ஆடிப்பெருக்கு விழாவாகும்.
இந்நாளில் புதிய தொழில் தொடங்குவது, தங்கம். வெள்ளி, நிலம், வீடு போன்றவற்றை வாங்குவதற்கு ஆடிப்பெருக்கு முக்கியமான நாளாகும். இந்த நாளில் புதிதாக எது தொடங்கினாலும் அது பன்மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை.இந்த நாளில் சுமங்கலி பெண்கள் தாலிக்கயிற்றை மாற்றிக் கொள்வர். அப்படி பெண்கள் தாலிக்கயிற்றை மாற்றிக் கொள்ளவும் சுப காரியங்களை ஆரம்பிக்கவும் உகந்த நல்ல நேரம் எது என்பதை இனிக் காண்போம்.
ஆடிப்பெருக்கு அன்று தாலிக்கயிற்றை மாற்றி புது மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட தாலியை கணவன் கையினால் அணிந்து கொள்வதால் மாங்கல்ய பலம் நீடிக்கும் என்பது நம்பிக்கை. இந்த வருடம் சுமங்கலி பெண்கள் தாலிக்கயிற்றை மாற்றுவதற்கு ஆன உகந்த நேரம் காலை 7:35 மணி முதல் 8:50 மணி வரை மற்றும் 10:35 மணி முதல் 11:55 மணி வரை மட்டுமே ஆகும். தாலி கயிற்றை மாற்றிக் கொள்பவர்கள் பகல் 12 மணிக்கு முன்பாகவே மாற்றிக்கொள்ள வேண்டும் 12 மணிக்கு பிறகு இறங்கு பொழுதில் தாலிக்கயிற்றை மாற்றிக் கொள்ளக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.