விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மூலம் திரையுலத்தில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் கவின். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். கவினுக்கு லிப்ட் படத்தில் நடித்த வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்து கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரிலீசான டாடா திரைப்படத்தில் கவின் நடித்தார்.
இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இதனை அடுத்து இளன் இயக்கத்தில் கவின் நடித்த ஸ்டார் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த படம் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் பிரபல இயக்குனரான நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் கவின் பிளடி பெக்கர் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை சிவபாலன் முத்துக்குமார் இயக்குகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது.
படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிளடி பெக்கர் படத்தை டிஜிட்டல் ரைட்ஸ்காக ஹாட்ஸ்டாரிடம் கொடுத்துள்ளனர். படத்தைப் பார்த்தா ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு திருப்தி இல்லை என கூறப்படுகிறது. மேலும் சாட்டிலைட் உரிமத்திற்காக சன் குழுமத்திடம் அந்த படத்தை போட்டு காண்பித்துள்ளனர். அவர்களுக்கும் திருப்தி இல்லை என கூறப்படுகிறது.
ஏனென்றால் ப்ளடி பெக்கர் படத்தில் பாடல் காட்சிகளே இல்லையாம். ஏற்கனவே சன் குழுமத்தின் தயாரிப்பில் நெல்சன் பீஸ்ட், ஜெயிலர் ஆகிய சூப்பர் ஹிட் இயக்கியுள்ளார். எனவே மாற்றத்தை ஏற்று கொண்டு நெல்சன் இரண்டு பாடல் காட்சிகளை ரெடி பண்ணி விட்டாராம். அதற்காக ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்து ஷூட்டிங்கை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் கவினுக்கு வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.