தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழகத்தில் தல வந்தால் தள்ளி தான் போகணும் என மற்ற திரைப்படங்கள் எதுவும் வெளியாகத நிலையில் மற்ற மாநிலங்களில் பல படங்கள் நாளை வரிசை கட்டி ரிலீஸ் ஆகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெரிய விடுமுறை இருந்தும் தமிழில் பெரிதாக போட்டியிட எந்த திரைப்படங்களும் வெளியாகவில்லை.
ஆனால் மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தியாகிய மொழிகளில் குட் பேட் அக்லி வசூலுக்கு போயிட்டு வைக்கும் வகையில் நாளை பல திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது. குறிப்பாக குட் பேட் அக்லி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர் தயாரிப்பில் மற்றொரு திரைப்படம் நாளை வெளியாவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அஜித்தின் இந்த படம் இந்திய அளவில் வசூலை குவிக்க வாய்ப்பே இல்லை என்றும் தமிழகத்தில் மட்டுமே நல்ல ஓபனிங் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. நாளை வெளியாகும் திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சன்னி தியோனின் ஜாட்:
கடார் 2 படத்தின் மூலமாக மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொடுத்த பாபி தியோலின் அண்ணன் சன்னி லியோன் நடித்துள்ள இந்த திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்தி மற்றும் ஆந்திராவில் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையை இந்த திரைப்படம் நிகழ்த்தும் என தெரிகிறது. இதனால் குட் நைட் அக்லி திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வசூல் வேட்டை நடத்துவது கஷ்டம் தான்.
மம்முட்டியின் பஸுகா:
டீனோ டென்னிஸ் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள இந்த திரைப்படமும் நாளை தான் ரிலீஸ் ஆகிறது. மலையாளத்தில் ஏப்ரல் பத்தாம் தேதியை குறிவைத்து மூன்று பெரிய படங்கள் வெளியாக உள்ள நிலையில் கேரள திரையரங்குகளுக்கு தெறி கொண்டாட்டம் என கூறப்படுகிறது.
மரண மாஸ்:
மலையாள நடிகர் பசில் ஜோசப் நடிக்கும் படங்களுக்கு இந்தியா முழுவதும் கடந்த சில வருடங்களாக ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள். சிவ பிரசாத் இயக்கத்தில் பசில் ஜோசப் நடித்துள்ள மரண மாஸ் திரைப்படமும் நாளை வெளியாக உள்ளது. தலையில் கலர் அடித்துக்கொண்டு மின்னல் முரளி இயக்குனர் புதுவிதமான கெட்டப்பில் நடித்துள்ள இந்த திரைப்படம் கேரளாவில் கல்லாகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலப்புழா ஜிம்கானா:
பிரேம் முழு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன் வசப்படுத்திய மலையாள திரை உலகின் இளம் நடிகர் நஸ்லேன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படமும் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் கேரளாவில் மரண மாஸ் மற்றும் ஆலப்புழா ஜிம்கானா மற்றும் பஸுகா ஆகிய படங்களுக்கு இடையே வசூலில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கேயும் தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு தான் சிக்கல் என்கின்றனர்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…