பாசமிகுந்த தாயை தேடி அலையும் மகன்கள்.. தாய்மார்களின் ஆதரவை பெற்றாரா ஊர்வசி.. “J பேபி” படத்தின் விமர்சனம்..

By Ranjith Kumar on பங்குனி 8, 2024

Spread the love

நீளம் ப்ரொடக்ஷன் பா ரஞ்சித் கம்பெனி தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் “ஜே பேபி”. இப்படத்தின் விமர்சனத்தை தான் சற்று பார்க்க உள்ளோம்; இப்படத்தில் வரும் முக்கியமான கதாபாத்திரத்தில் ஊர்வசி, தினேஷ், மாறன் நடித்துள்ளார்கள். தாய் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் திரையில் ஓரளவு விமர்சனங்களை பெற்றுள்ளது.


இக்கதையின் சுருக்கம்; தினேஷ் மற்றும் மாறன் இருவரும் குடித்துவிட்டு அடிக்கடி சண்டை இட்டுக் கொள்வதால், இந்த குடும்ப பிரச்சனையில் மன உளைச்சலுக்கு ஆளாகி ஊர்வசி அவர்கள் சொந்த ஊரை விட்டு தொலைந்து, வட மாநிலமான மேற்கு வங்கத்திற்கு சென்று விடுகிறார். தினேஷும் மாறனும் இணைந்து காவல்துறையிடம் புகார் அளித்து, காவல் துறையினர் ஊர்வசி இருக்கும் இடத்தை கண்டறிந்து, இவர் இருவரும் சென்று ஊர்வசியை பார்த்தார்களா? அம்மாவை மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்தார்களா? என்று தான் கதைகளம் அமைந்துள்ளது.

   

தினேஷ் வீட்டில் அம்மாவை மதிக்காமல் சகோதரனுடன் சண்டை இட்டுக் கொண்டே இருக்கிறார், மாறன் அவர்களும் தினேஷுக்கு சரி சமமாக தன் சகோதரன் என்று மறந்து சண்டைக்கு முன் வந்து கொண்டிருக்கிறார். இதற்கு இடைப்பட்டு ஊர்வசி மாட்டிக்கொண்டு மிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார். ஊர்வசி மனநலக் காப்பகத்திற்கு சென்றும் இவர்கள் பிரச்சனையும், மனநிலையும் மாறாமல் தவிக்கும் அவர் நடிப்பு மிக அற்புதமாக இருக்கிறது. மாறன் போதைக்கு அடிமையாகி குடும்பத்தை துன்புறுத்தி வந்தாலும், அதற்கான காரணமாக அவருக்கு கல்யாணம் நடக்காமல் இருப்பதின் காரணத்தை வெளிப்படுத்தி நடிப்பில் மிகச் சிறப்பாக காட்டியிருப்பார்.

   

பொதுவாக தினேஷ் அவர்கள் பிரபல நடிகராக இல்லாவிட்டாலும் அவர் தேர்ந்தெடுக்கும் கதை ஒன்றும் மிகச் சிறப்பாக இருக்கும். அட்டகத்தி, விசாரணை போன்ற படங்களில் நடித்து தன் முழு திறமையும் வெளிக்கொண்டு வந்திருப்பார். அதே போல தான் இப்படத்திற்கும் தன் எதார்த்தமான நடிப்பை காண்பித்து அண்ணனுக்கும் தம்பிக்கும் ஏற்படும் சண்டையில் அம்மா மன உளைச்சல் ஆளாகி காணாமல் போனதை தெரிந்து மனம் உருகி இருவரும் சேர்ந்து தேடித் அலையும் பொழுது தனது தத்ரூபமான நடிப்பை வெளிக்கொண்டு வந்திருப்பார். இப்படத்தின் கதை உண்மை சம்பவம் என்பதால் இதில் நடக்கும் அனைத்தும் மக்களுக்கு மிக எதார்த்தமாக ஒத்துப் போகின்றது.

 

இப்படத்தில் சறுக்கல் என்னவென்றால் தொகுப்பாளர் கொண்டு போகும் விதம்தான், சில இடங்களில் சீரியல் போல் படங்களை ஜவ்வாக இழுத்துக் சென்றிருக்கிறார். அதுமட்டுமின்றி படத்தின் பின்னணி இசை கதைகேற்றவாறு நன்றாக அமர்த்து இருந்தால் இன்னும் சிறப்பூட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் மிகச் சிறப்பான விஷயம் என்னவென்றால், உண்மை சம்பவத்தில், உபியில் காணாமல் போன அம்மாவிற்கு உதவிய நபரையே இப்படத்தில் அந்த கதாபாத்திரத்தில் வைத்திருப்பார்கள். இது படத்திற்கு மேலும் ஒரு உந்துகோலாக அமைந்துள்ளது. படத்தின் கதையும், திரைக்கதையும் இயக்குனர் மிகச் சிறப்பாக அமைத்து திரையில் மக்களுக்கு எளிமையாக காட்டி உள்ளார். இதுவே படத்தின் நல்ல வரவேற்புக்கு காரணம் ஆகும்.