ஐடிஐ மாணவரை நிர்வாணப்படுத்தி… செருப்பால் தாக்கி சக மாணவர்கள் அட்டூழியம்… தமிழகத்தை அதிரவைத்த சம்பவம்..!!

By Soundarya on புரட்டாதி 23, 2025

Spread the love

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஐடிஐ விடுதியில் மாணவர் ஒருவரை நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்யப்பட்டதாக அதிர்ச்சி வீடியோ வெளியானது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செல்லும் வழியில் செக்கானுரணி என்ற பகுதியில் தொழிற் பயிற்சி கல்விக்கான ஐடிஐ கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கே விடுதியும் உள்ளது. இந்த நிலையில் விடுதியில் இருந்த மாணவன் ஒருவரோடு தங்கி இருந்த சக மாணவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக தாக்குவது போன்ற வீடியோ காட்சி வெளியாகியது.

அதில் மாணவனை நிர்வாணப்படுத்தி செருப்பை கொண்டு தாக்கி துன்புறுத்துவது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ராகிங்க் கொடுமையா? அல்லது பாலியல் வன்கொடுமையா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் சம்மந்தப்பட்ட மூன்று மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை கொண்டு வருகிறார்கள். மேலும்  விடுதி காப்பாளர் மீதும் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.