கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக நகராட்சி தலைவராக உள்ள திமுகவைச் சேர்ந்த வெண்ணிலா என்பவர் கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவிற்கு நகராட்சி வாகனத்தில் சென்றதால் அவருடைய வாகன ஓட்டுனரை பணிநீக்கம் செய்து அவருடைய காரையும் பறித்த சம்பவத்தை கண்டித்து நகராட்சி வாசலில் தரையில் அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நகராட்சியில் உள்ள ஒட்டுமொத்த கவுன்சிலர் சேர்ந்து அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து நம்பிக்கை இல்லா தீர்மானம் மனு அளித்த கவுன்சிலர்கள் கூறுகையில், “நகராட்சி தலைவியாக உள்ள வெண்ணிலா உறுப்பினர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. நகராட்சி ஊழியர்களை தரக்குறைவாக பேசி வருகிறார் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர் .மேலும் இது குறித்து கூறிய வெண்ணிலா கூறுகையில், “என்னை அடக்கி வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் . எங்கள் முன்னாடியே கெத்தா கார்ல போறியா? என்னைக்கா இருந்தாலும் இதற்கு பதில் சொல்வாய் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள் . தற்போது அந்த காரணத்தை வைத்து என்னை அசிங்கப்படுத்தி காரை பிடுங்கி கொண்டார்கள். இதற்கு நகராட்சி துணைத்தலைவரும், கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளும் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
