சென்னையில் ஆர்யாவுக்கு சொந்தமான உணவகங்களில் ஐடி ரெய்டு… காலையிலேயே பெரும் பரபரப்பு..!!

By Soundarya on ஆனி 18, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. சினிமாவில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் இவர் தற்போது வரை முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றார். தான் ஏற்றுக்கொண்டு நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு பல அர்ப்பணிப்புகளை செய்யக்கூடியவர். இவரை பார்ப்பவர்கள் எல்லாம் எப்போது கல்யாணம் என்று தான் கேட்பார்கள். ஒரு வழியாக அவர் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் நடித்த போது பழக்கம் ஏற்பட்ட பின்னர் திருமணம் செய்து கொண்டனர். கடைசியாக இவர் நடிப்பில் மதகஜராஜா படம் வெளியானது. இதில் விஷாலுடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் சார்பட்டா 2, மிஸ்டர் எக்ஸ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் நடிகர் ஆயாவிற்கு சொந்தமான உணவகங்களை வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஐடி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.