Amazon prime ஓடிடி தளத்தில் இன்று முதல் விளம்பரங்கள் ஒளிபரப்பாகும் என்று புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒரு மணி நேர காட்சியில் சுமார் 4 முதல் 6 நிமிடங்கள் வரை விளம்பரங்கள் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று முதல் விளம்பரங்கள் ஒளிபரப்பாகும் என்றும் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போதைய சந்தா உடன் கூடுதலாக 699 ரூபாய் செலுத்தினால் மட்டும்தான் விளம்பரங்களை தவிர்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. இதுவரை விளம்பரங்களை தவிர்ப்பதற்கு எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாத நிலையில் தற்போது விளம்பரங்களை தவிர்க்க 699 ரூபாய் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்தச் செய்தி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
