வாட்ஸ்அப்பின் புதிய அட்டகாச அப்டேட்…! இனி விருப்பமான நேரத்திற்கு மெசேஜ் தானாகவே போகும்…. பயனர்களுக்கு செம குட் நியூஸ்…!!

By Devi Ramu on ஐப்பசி 13, 2026

Spread the love

பிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப், தனது பயனர்களின் வசதிக்காகப் பல்வேறு புதிய அம்சங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், பயனர்கள் தாங்கள் விரும்பும் நேரத்திற்கு மெசேஜ்களைத் தானாக அனுப்பும் வகையில் ‘Schedule Messaging’ வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம், நள்ளிரவு 12 மணிக்கு நண்பர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிப்பதற்கோ அல்லது அதிகாலையில் குட் மார்னிங் மெசேஜ் அனுப்புவதற்கோ இனி முழித்திருக்க வேண்டிய அவசியமில்லை.

இந்தச் சேவை முதற்கட்டமாகச் சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்குச் சோதனை முறையில் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு மெசேஜை செட் செய்துவிட்டால், அந்த நேரத்தில் பயனர்களின் தலையீடு இன்றியே மெசேஜ் தானாகச் சென்றுவிடும். வாட்ஸ்அப்பின் இந்த புதிய அப்டேட் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பயனர்கள் இதனை மிகுந்த ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.