பாக்யராஜ் நெஞ்சில் பார்த்திபன் வைத்த அந்த ‘PPP’ ரகசியம் என்ன? மயானத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்… வெளி வந்த கலங்க வைக்கும் உண்மை …!

By Visaka on ஆனி 30, 2026

Spread the love

இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு தந்த சோக வடு ஆறுவதற்குள்ளேயே, அவரின் முதன்மை சிஷ்யரும் திரைக்கதை மன்னனுமான கே.பாக்யராஜின் மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. தன் குருவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட நடிகர் பார்த்திபன், பெசன்ட் நகர் மின் மயானம் வரை சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியதுடன், அதுகுறித்த உருக்கமான பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், உதவி இயக்குநராக இருந்த காலத்தில் அதிகாலையிலேயே அலுவலகம் சென்று தன் குருவிற்காக பேட், பேப்பர், பேனா (PPP) ஆகியவற்றைத் தயார் நிலையில் வைக்கும் வழக்கத்தைக் குறிப்பிட்டவர், தற்போதும் அதேபோல ‘அன்புடன் உங்கள் பாக்யராஜ்’ என்று எழுதப்பட்ட பேப்பரை ஒரு எழுதட்டையில் வைத்து அவரின் இதயத்திற்கு அருகில் நெகிழ்ச்சியோடு வைத்துள்ளார். தீப்பிழம்புகளுக்குள் அந்த எழுதட்டை நகர்ந்து சென்ற காட்சியையும், கூகுள் வழி தேட முடியாத இடத்திற்குச் சென்ற தன் குருவின் அஸ்தியை பெசன்ட் நகர் கடலில் கரைத்ததையும் நினைவுகூர்ந்து பார்த்திபன் பதிவிட்ட ட்வீட் ரசிகர்களை உருக வைத்துள்ளது.

இந்தத் துயரமான சூழலிலும் தன் குருவுக்கான நன்றிக்கடனை மறக்காத பார்த்திபன், அஸ்தியைப் பெறக் காத்திருந்த பாக்யராஜின் மகன் சாந்தனுவுக்குப் புதிய பட வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முயன்றுள்ளார். அங்கு வந்த தயாரிப்பாளர் கண்ணன் ரவியிடம், சாந்தனுவை வைத்து மீண்டும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்; திறமைகளைத் தாண்டி இங்கு வெற்றி மட்டுமே கொண்டாடப்படும் என்பதால், சாந்தனுவின் திரைப்பயணம் ஜெயிக்க வேண்டும் என்பதே தன் விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, “அப்பாவுக்கு என் ஆயுளிலிருந்து சில வருடங்களை உசுராகக் கொடுத்துவிட முடியாதா?” என்று சாந்தனு வேதனையுடன் வெளியிட்ட வீடியோ பதிவைப் பார்த்த திரையுலகினரும் ரசிகர்களும் கண்ணீருடன் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். எதையும் மாற்றி யோசிக்கும் பார்த்திபன் தன் குருவின் நினைவாகச் செய்த காரியங்களும், பாக்யராஜ் கடைசியாக யோசித்து வைத்த படத்தின் பெயர் ‘மயான கொள்ளை’ என்ற தகவலும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.