அடுத்த பரபரப்பு… கைமாறிய பல கோடிகள்.. வசமாக சிக்கிய அமைச்சர்… CM விஜய்க்கு வந்த புதிய சிக்கல்…!

By SATHISH R on ஆனி 30, 2026

Spread the love

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடமாற்றத்தில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எஸ்.எஸ். பாலாஜி குற்றம்சாட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த இடமாற்ற விவகாரத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவின் மாமனாரின் தலையீடு இருப்பதாக எழுந்துள்ள புகார்கள், தவெக முன்வைக்கும் ‘ஊழலற்ற ஆட்சி’ என்ற முழக்கத்தையே தற்பொழுது கேள்விக்குறியாக்கியுள்ளது.

நிர்வாகத் தூய்மையை உறுதிப்படுத்தும் வகையில், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதன் மூலமே தங்களின் ஊழலற்ற ஆட்சி என்ற வாக்குறுதியை நிலைநிறுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.