தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பங்கேற்றார் . அந்த விழாவில் உரையாற்றிய அவர் , நடபாண்டில் இந்திய ராக்கெட்டுகளை பயன்படுத்தி அமெரிக்காவின் 6500 கிலோ எடை உள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்வெளியில் வெற்றிகரமாக அனுப்பி நிலை நிறுத்தப்பட்டது. அத்துடன் (இந்திய விண்மீன் அமைப்புடன் வழி செல்லுதல்) (NAVIC) செயற்கைக்கோள் மற்றும் என் 1 ராக்கெட் போன்ற திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது. மேலும் ராக்கெட்டின் கொள்ளளவு என்ன உங்களுக்கு தெரியுமா?.
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் உருவாக்கிய முதல் ராக்கெட் 17 டன் எடை கொண்டது . இது 35 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை தாழ்வான பூமி சுற்று பாதையில் செலுத்தும் திறன் கொண்டது. இன்று நாங்கள் 75,000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை தாழ்வான பூமி சுற்று பாதையில் செல்லும் ராக்கெட்டை உருவாக்கி வருகின்றோம். இந்த ராக்கெட்டின் உயரமானது 40 மாடி கட்ட கட்டிடத்தில் உயரத்தை கொண்டுள்ளது. இந்த ஆண்டு தொழில்நுட்ப செயல் விளக்க செயற்கைக்கோள் (TDS) மற்றும் இந்திய ராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் ( GSAT-7R) போன்ற இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. தற்போது இது ஜிசாட்-7 ருக்மணி செயற்கைக்கோளுக்கு மாற்றாக இந்திய கடற்படைக்காக பிரத்தியோகமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் 55 செயற்கை கோள்கள் சுற்றுப்பாதையில் அமைந்துள்ளன. இந்த எண்ணிக்கையின் அளவு இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கக்கூடும் என அவர் பேசியுள்ளார்.
