திமுக அமைச்சர்கள் சிலர் சர்ச்சைகளில் சிக்கி பதவியை இழந்துள்ளனர். அந்த வகையில் அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குள்ளாகி அமைச்சர் பதவியையும் மற்றும் கட்சிப் பதவிகளை இழந்துள்ளார். திமுக எம்.எல்.ஏ. எபினேசர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமுக வலைத்தளத்தில் பரவி வருகிறது. ஆர் கே நகர் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளதால் அப்பகுதி மக்களை அழைப்பதற்காக திமுக, எம்.எல்.ஏ. எபினேசர் மற்றும் நிர்வாகிகள் சென்றிருந்தனர்.
அப்போது அங்கிருந்த ஒருபெண் மகளிர் உரிமைத் தொகை பற்றி கேள்வி எழுப்பினார் . அதைத்தொடர்ந்து பல பெண்கள் கேள்வி எழுப்பினர். இதனால் அப்பகுதி மக்களுக்கும் எபினேசர் எம்.எல்.ஏ.வுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் அங்கிருந்த பொது மக்களை மெண்டல்கள் போல பேசுவதாக கூறியுள்ளார்.
அதனால் அங்கு சில நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இது தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலையத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். ஏழை வயிற்றில் அடித்தவர்கள் யாரும் நல்லா வாழ முடியாது. நன்றி கெட்ட எம்.எல்.ஏ. எபினேசர் இதை விரைவில் உணருவார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் எபிநேசர் கேள்வி எழுப்பிய மக்களை அடிக்க முற்படுகிறார்..
ஏழை வயிற்றில் அடித்தவர்கள் யாரும் நல்ல வாழ்வு கண்டதில்லை!
நன்றிகெட்ட இந்த எம்.எல்.ஏ எபிநேசரும் இதனை உணரும் காலம் தூரத்தில் இல்லை!#Sadist_DMKGovt pic.twitter.com/GdCpJIghuB— DJayakumar (@djayakumaroffcl) December 10, 2023
