“நாங்க மூணு பேரும் சாகப் போறோம்”என நண்பர்களுக்கு whatsapp மெசேஜ் அனுப்பி விட்டு பிள்ளைகளுடன் ஒரே கயிற்றில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் குடும்ப பிரச்சனை காரணமாக ராஜா (40), அவருடைய மகன் குமரகுரு (12), தன்யஸ்ரீ (7) ஆகியோர் இந்த முடிவை எடுத்துள்ளனர். மூவரது உடல்களையும் பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
