ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் தற்போது உலக நாடுகளைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரானின் அணு ஆயுதம் வைக்கும் முயற்சியைத் தடுக்க இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடுத்த தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பதிலடியாக ஈரான் தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், பாகிஸ்தான் முன்னிலையில் அமெரிக்காவுடன் நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அணு ஆயுதக் கொள்கையில் ஈரான் பிடிவாதமாக இருப்பதால், மத்திய கிழக்கில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.
மறுபுறம், உலகளாவிய எரிபொருள் போக்குவரத்தின் முக்கிய மையமான ஹார்மூஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அந்த வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நீரிணையை மீட்டெடுக்க அமெரிக்கா முயற்சி செய்து வரும் நிலையில், “ஹார்மூஸைத் திறக்க மாட்டோம்” என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் உலகப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ் செய்தியாளர்களிடம் பேசியது போரின் தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஈரானை மீண்டும் இருண்ட காலத்திற்கும், கற்காலத்திற்கும் தள்ளும் வகையில் அந்நாட்டின் முக்கிய எரிசக்தி மற்றும் மின் நிலையங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் இறுதி ஒப்புதலுக்காக இஸ்ரேல் காத்திருப்பதாகவும், இந்த முறை தாக்குதல் ஈரானின் பொருளாதாரக் கட்டமைப்பை முழுமையாகச் சீர்குலைத்து, பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி, அங்கிருந்த சறுக்கு மரம் (Slide)…
ஈரான் உடனான மோதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இருப்பினும்,…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரில், அமெரிக்க ராணுவம் தனது அதிநவீன ஆயுதங்களை மிக அதிக அளவில்…
திருப்பதி மாவட்டம் நாராயணவனம் அருகே உள்ள வெங்கட கிருஷ்ண பாளையத்தைச் சேர்ந்த சிமெண்ட் வியாபாரி மோகன், கடன் தொல்லை மற்றும்…
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த காடப்பநல்லூர் பகுதியைச் சேர்ந்த தையல் தொழிலாளி குமார் என்பவரது மகன் கவின்ராஜ் (21), காவிரி…
கடந்த 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.வின் மேற்கு மண்டலப் பொறுப்பாளரான வி.செந்தில் பாலாஜி கரூரில் உள்ள ராமேஸ்வரப்பட்டியில் தனது…