போர்நிறுத்த ஒப்பந்தம் தவிடுபொடி..? லெபனானில் மீது இஸ்ரேல் நடத்திய கொடூர வான்வழித் தாக்குதல்.. குழந்தைகள் உட்பட 16 பேர் பலி…!!

Spread the love

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இஸ்ரேல் மற்றும் லெபனான் அரசுகளுக்கு இடையே தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டு, அது நீட்டிக்கப்பட்டும் வந்தது. இருப்பினும், இந்த உடன்படிக்கையை மீறி லெபனானின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து நடத்தப்படுவதாகக் கூறப்படும் இத்தாக்குதல்கள், எல்லையோரக் கிராமங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு லெபனானில் உள்ள சக்ஸகியே, நபதியே மற்றும் டயர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இஸ்ரேல் நடத்திய வான்வழி மற்றும் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல்களில் குடியிருப்பு கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டதுடன், உள்ளூர் பள்ளி ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் இந்த தீவிரத் தாக்குதலுக்குப் பதிலடியாக, லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலிய ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், எல்லையில் தினசரி நிகழும் இந்தத் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்புகளால் போர்நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை லட்சக்கணக்கான லெபனான் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

Swetha

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

50 minutes ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

1 மணத்தியாலம் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

2 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

2 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

2 மணத்தியாலங்கள் ago