இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பை மறைத்து வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் பொய்ப் பிரச்சாரங்களைத் தவிர்ப்பதற்காகவே இந்தத் தகவலை ரகசியமாக வைத்திருந்ததாக அவர் தற்போது வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
சுமார் 18 மாதங்களுக்கு முன்பு அவருக்கு ‘ப்ரோஸ்டேட்’ (Prostate) புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான அளவில் இருந்த அந்தத் தழும்பு, ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. தற்போது தான் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், “அந்தப் பிரச்சனை இப்போது முடிந்துவிட்டது” என்றும் அவர் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடனான போர் மற்றும் பதற்றமான சூழலில், தனது உடல்நிலை குறித்த தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதற்காகவே மருத்துவ அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் செய்ததாக அவர் விளக்கியுள்ளார். இஸ்ரேலிய மருத்துவர்களும் பிரதமர் நெதன்யாகு தற்போது “சிறந்த உடல் தகுதியுடன்” இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
